FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கிராம உதவியாளர்கள் தட்டு ஏந்திப் போராட்டம்

தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை தட்டு ஏந்திப் பிச்சை எடுக்கும் போராட்டம் மேற்கொண்டனர்.

Updated On : 26 ஜூன் 2018, 8:39 am IST
பகிர்:

தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை மாலை தட்டு ஏந்திப் பிச்சை எடுக்கும் போராட்டம் மேற்கொண்டனர்.
முப்பது ஆண்டு காலமாக ஒரே கோரிக்கையான காலமுறை ஊதியம் கேட்டு அமைச்சர்களுடனும், அரசு அலுவலர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியும், பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசு இதுவரை கண்டு கொள்ளவில்லை எனக் கூறியும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நெற்றியில் பட்டை நாமம் இட்டு, தட்டு ஏந்தி, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் அ.கா. தங்கராசு தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் ஏ. ரெங்கசாமி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் பி. பார்த்தசாரதி பேசினர். சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர்கள் சி. பரஞ்சோதி, ஜி. அடைக்கலம், இணைச் செயலர் ஏ. கருணாநிதி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments