திருக்காட்டுப்பள்ளி அருகே இளம் வயது திருமணம் தடுத்து நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே இளம் வயது திருமணத்தை சைல்டு லைன் அமைப்பினர், போலீஸார் உள்ளிட்டோர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே இளம் வயது திருமணத்தை சைல்டு லைன் அமைப்பினர், போலீஸார் உள்ளிட்டோர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முடித்த சிறுமிக்கும், திருவாரூர் மாவட்டம், கோவிந்தங்குடியைச் சேர்ந்த இளைஞருக்கும் வெள்ளிக்கிழமை (மே 25) திருமணம் நடைபெற இருந்தது.
இதுகுறித்து தஞ்சாவூர் சைல்டுலைன் அமைப்பின் 1098 என்ற எண்ணுக்குப் புகார் வந்தது. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், செண்பகமலர், குழந்தைப் பாதுகாப்பு அலகு களப் பணியாளர்
செல்வம், திருக்காட்டுப்பள்ளி போலீஸார் ஆகியோர் மைக்கேல்பட்டியில் உள்ள சிறுமி வீட்டுக்குச் சென்று, சிறு வயதில் இருக்கும் சிறுமிக்குத் திருமணம் செய்யக் கூடாது என பெற்றோரை எச்சரிக்கை செய்தனர். மேலும், பெற்றோரிடம் எழுதி வாங்கினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.