FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பட்டுக்கோட்டை அருகே கழுத்தை அறுத்து  இளைஞர் கொலை

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் உள்ள கனரக வாகன சுமைகளை எடைபோடும் நிலையம் அருகிலுள்ள வயலில்

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளம் பைபாஸ் சாலையில் உள்ள கனரக வாகன சுமைகளை எடைபோடும் நிலையம் அருகிலுள்ள வயலில் புதன்கிழமை மாலை 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து, பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையிலான போலீஸார் சம்பவயிடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டுக் கிடந்தவர் யார், எந்த ஊர் என்பது உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து, போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments