FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பேராவூரணியில் வருவாய்த் துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

பேராவூரணியில் வருவாய்த் துறையினரின் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

30 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

பேராவூரணியில் வருவாய்த் துறையினரின் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
வருவாய்த் துறையில் காலியாக உள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவுட் சோர்சிங் முறையில் ஆள்குறைப்பு செய்யும் அரசாணை எண்-56 ஐ ரத்து செய்ய வேண்டும். ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி நிலுவையில் உள்ள 21 மாத கால தொகையை வழங்கிட வேண்டும். மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 
தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில்  கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு வருவாய்த் துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் எல். சுந்தரமூர்த்தி  தலைமை வகித்தார். வட்டத் தலைவர் என். கமலநாதன் முன்னிலை வகித்தார். கிராம உதவியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர்  சி.பரஞ்சோதி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். கிராம உதவியாளர் சங்க சரகத் தலைவர் டி.கார்த்தி நன்றி கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments