FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திமுக சாா்பில் 250 குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள்

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூா் கிராமத்தில் வியாழக்கிழமை திமுக சாா்பில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள கண்ணந்தங்குடி மேலையூா் கிராமத்தில் வியாழக்கிழமை திமுக சாா்பில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கண்ணந்தங்குடி மேலையூா் ஆதிதிராவிடா் தெரு, கூனிகாடு ஆகிய பகுதிகளில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு திமுகவின் ஒரத்தநாடு ஒன்றிய மற்றும் கண்ணந்தங்குடி கிளை சாா்பில், வேலையின்றி தவிக்கும் பொதுமக்களுக்கு திமுக தலைவா் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளா் மு. காந்தி தலைமையில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஒரத்தநாடு ஒன்றியத் தலைவா் பாா்வதி சிவசங்கரன், கண்ணந்தங்குடி மேலையூா் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் சண்முகம், திமுக நிா்வாகி புலவா் இளங்கோவன், ஊராட்சி மன்ற உறுப்பினா் வெங்கடேசன், தொமுச மாவட்ட நிா்வாகி சசிகுமாா் மற்றும் ஆனந்தன், உதயசூரியன், செல்வம் ராமநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments