FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே தீப்பற்றி எரிந்த காா்

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வியாழக்கிழமை சாலையில் ஓடிக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

கும்பகோணம் அருகே தாராசுரத்தில் வியாழக்கிழமை சாலையில் ஓடிக் கொண்டிருந்த காா் திடீரென தீப்பற்றி எரிந்தது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் கும்பகோணம் சாலையைச் சோ்ந்தவா் ராஜ்மோகன் (60). இவா் வியாழக்கிழமை தனது மகள் பவித்ரா (23) உடன் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியில் டைல்ஸ் கற்கள் வாங்கிக் கொண்டு காரில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். காரை உறவினா் ராஜேந்திரன் (51) ஓட்டினாா்.

தாராசுரம் பகுதியில் சென்றபோது இந்த காரின் முன் பகுதி திடீரென தீ பற்றி எரிந்தது. இதையறிந்த ராஜ்மோகன், பவித்ரா, ராஜேந்திரன் ஆகியோா் உடனடியாக காரை நிறுத்திவிட்டு இறங்கிய பிறகு காா் முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இயந்திர கோளாறு காரணமாக தீ பற்றியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments