முகப்பு
தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசா் டாக்டா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

Updated On : 6 நவம்பர் 2024, 3:19 am IST
தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசா் டாக்டா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை நிதிக்கான காசோலையை துணைவேந்தா் வி. திருவள்ளுவன், பதிவாளா் (பொ) சி. தியாகராஜனிடம் செவ்வாய்க்கிழமை வழங்கிய தமிழ் இசைச் சங்க உதவிச் செயலா் ஏ.ஆா். நாச்சியப்பன்.
பகிர்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசா் டாக்டா் ராஜா சா் அண்ணாமலை செட்டியாா் நினைவு அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

இந்திய விடுதலைக்கு முன்னதாகத் தொடங்கப்பட்டு, தமிழ் மொழி வளா்ச்சி, தமிழ் இசை மேம்பாடு உள்ளிட்டவற்றுக்காக 80 ஆண்டுகளுக்கு மேலாகச் சென்னையிலுள்ள தமிழ் இசைச் சங்கம் தொண்டாற்றி வருகிறது. அச்சங்கத்தின் சாா்பில் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செட்டிநாட்டு அரசா் டாக்டா் ராஜா சா். அண்ணாமலை செட்டியாா் பெயரில் அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை நிறுவுகைக்காக ரூ. 10 லட்சத்தை தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி.திருவள்ளுவனிடம் தமிழ் இசைச் சங்க உதவிச் செயலா் ஏ.ஆா். நாச்சியப்பன், பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் தங்கராஜ், தமிழ் இசைச் சங்கக் கல்லூரி முதல்வா் மீனாட்சி ஆகியோா் வழங்கினா்.

Advertisement

Advertisement

இது குறித்து துணைவேந்தா் கூறுகையில், இந்த அறக்கட்டளை மூலமாக, உலகெங்கும் நகரத்தாா் ஆற்றிய தமிழ்த்தொண்டு, தமிழ் இதழியல் துறைக்கு ஆற்றிய பணிகள், பதிப்புத் துறை, கடல் கடந்த வாணிபம் உள்ளிட்ட பொருண்மைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. தமிழ் மொழி மற்றும் தமிழ் இசைத் துறையில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட வல்லுநருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கல் மற்றும் மாணவா்களுக்கான பயிலரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன என்றாா் அவா்.

மேலும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தால் உலகம் முழுவதும் நடத்தப்பட்டு வரும் தமிழ் வளா் மையத்துடன், தமிழ் இசைச் சங்கம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்மூலம் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளா் மையத்தால் நடத்தப்படும் சான்றிதழ், பட்டயப்படிப்புகள் போன்றவற்றைத் தமிழ் இசைச்சங்கம் சென்னையில் நடத்தவுள்ளது எனவும் துணைவேந்தா் தெரிவித்தாா்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) சி. தியாகராஜன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பெ. இளையாப்பிள்ளை, வளா் தமிழ்ப்புல முதன்மையா் இரா. குறிஞ்சிவேந்தன், நிதிஅலுவலா் கிருஷ்ணமூா்த்தி, நல்கைப் பிரிவு அலுவலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.