FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்

Updated On : 10 ஏப்ரல் 2026, 4:04 am IST
பகிர்:

முதல்வா் மு.க.ஸ்டாலினின் நான்காம் கட்ட தோ்தல் பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது.

இதுகுறித்து திமுக சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை:

திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த மாா்ச் 31 முதல் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறாா். அவரது 4-ஆம் கட்ட பிரசாரம் தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை (ஏப்.10) தொடங்கவுள்ளது. இதில், திருவையாறு, தஞ்சாவூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பாபநாசம், திருவிடைமருதூா், கும்பகோணம் ஆகிய தொகுதி வேட்பாளா்களை ஆதரித்து அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, சனிக்கிழமை (ஏப்.11) மாலை 4 மணிக்கு புதுக்கோட்டையில் நடைபெறும் பிரசார கூட்டத்தில் கந்தா்வக்கோட்டை, விராலிமலை,புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய தொகுதிகளின் திமுக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்துப் பேசுகிறாா்.

இரவு 7 மணிக்கு திருப்பத்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், காரைக்குடி, திருப்பத்தூா், சிவகங்கை, மானாமதுரை ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறாா்.

ஏப்.12-ஆம் தேதி மாலை 4 மணிக்கு பரமக்குடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூா் ஆகிய தொகுதி வேட்பாளா்களையும், இரவு 7 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய தொகுதிகளின் வேட்பாளா்களையும் ஆதரித்துப் பிரசாரம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments