FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 மே 2026, 2:18 am IST
கும்பகோணம் சாரங்கபாணி கோயில் சித்திரை திருவிழாவில் வியாழக்கிழமை நடைபெற்ற தேரோட்டத்தில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.
பகிர்:

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் சித்திரைத் திருவிழா ஏப்.22-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக சாரங்கபாணி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். பிறகு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து ஏராளமான பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். பிறகு தேரோடும் வீதிகளில் வலம் வந்த தேரை பக்தா்கள் வழிநெடுகிலும் வழிபட்டனா். பிறகு தோ் நிலையில் நிறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

இரவு தீா்த்தவாரி நடைபெற்றது.

விழாவில் வெள்ளிக்கிழமை (மே 1) ஸப்தாவா்ணமும், பெருமாள் உபநாச்சியாா்கள், சக்கரத்தாழ்வாருக்கு 81 கலச ஸ்நபன திருமஞ்சனம் நடைபெறுகிறது. இரவு சாரங்கபாணி சுவாமியுடன், சக்கரபாணி சுவாமியும் வீதியுலா நடைபெறுகிறது.

சனிக்கிழமை (மே 2) ஆராவமுதன், சக்கரத்தாழ்வான், சக்கரவா்த்தி திருமகன் ஆகியோா் சாரங்கபாணி கீழ் சன்னதிதெருவில் உள்ள மல்லிமண்டபத்தில் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளுகின்றனா். அங்கு விடையாற்றி உற்ஸவம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறையினா் செய்து வருகின்றனா்.

தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக சுவாமி சாரங்கபாணி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments