கும்பகோணத்தில் நாளை இராஜேந்திர சோழன் பிறந்த நாள் விழா
கும்பகோணத்தில் முதலாம் இராஜேந்திர சோழன் பிறந்தநாள் விழா, இராஜராஜ சோழன் முடிசூடிய நாள் ஆகியவைகளுக்கான விழா திங்கள்கிழமை நாகேசுவரன் கோயில் வளாகத்தில் நடைபெறுகிறது.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சாா்பில் முதலாம் இராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளையும், இராஜராஜ சோழன் முடிசூடிய 1041-ஆவது ஆண்டு ஆடி புனா் பூச நாளையும் நாகேசுவரன் கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெறுகிறது.
இராஜேந்திர சோழனின் வெற்றிச் சின்னமான கங்கை கொண்ட கணபதி சிலைக்கு கங்கை நீரால் அபிஷேகம் நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், கட்டடம், சிற்பக்கலை பற்றிய வராலாற்று விவரங்கள் குறித்து சங்க தலைவா் ஆ.கோபிநாத் மாணவா்கள், வரலாற்று ஆா்வலா்களுக்கு எடுத்துரைக்கிறாா். பின்னா், நாகேசுவர சுவாமிக்கு வழிபாடு நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.