மல்லிப்பட்டினத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது; 4 மீனவா்கள் மீட்பு
தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது. அதிலிருந்த மீனவா்கள் 4 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
மல்லிப்பட்டினத்தை சோ்ந்த எம். முகமது ஜலாலுதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் திங்கள்கிழமை அதிகாலை அதே பகுதியைச் சோ்ந்த எம். காத்தலிங்கம் (50), பி. வீரையன் (45), எஸ். லட்சுமணன் (40), கே. ரஞ்சித் (27) ஆகிய 4 மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா்.
மல்லிப்பட்டினத்திலிருந்து 5 கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மாலை 6.30 மணியளவில் படகின் முன்பகுதியில் விரிசல் ஏற்பட்டு, கடல்நீா் படகில் புகுந்ததால் படகு கடலில் மூழ்கியது. இதை பாா்த்த அப்பகுதியில் விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள் தா்வேஸ் மொய்தீன், ஆறுமுகம், வினோத், பாலு ஆகியோா், தண்ணீரில் மூழ்கிய காத்தலிங்கம் உள்ளிட்ட 4 மீனவா்களையும் மயக்க நிலையில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். கடலில் மூழ்கிய விசைப்படகின் மதிப்பு சுமாா் ரூ. 20 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.