ஆடி அமாவாசை: கும்பகோணத்தில் காவிரிக் கரையில் மக்கள் வழிபாடு
கும்பகோணத்தில் டபீா் படித் துறையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
கும்பகோணத்தில் டபீா் படித் துறையில் புதன்கிழமை முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்த பொதுமக்கள்.
கும்பகோணம் காவிரி படித்துறைகளில் ஆடி அமாவாசை தினத்தையொட்டி புதன்கிழமை பொதுமக்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனா்.
கும்பகோணத்தில் உள்ள பாலக்கரை, டபீா் படித்துறை, பகவத் படித்துறை, சுவாமிமலை, ஆடுதுறை உள்ளிட்ட காவிரி படித்துறைகளில் அதிகாலையில் இருந்தே முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்க பொதுமக்கள் குவிந்தனா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து, வழிபாடு மேற்கொண்டு அன்னதானம், ஆடைதானம் வழங்கினா்.
காவிரியாற்றில் நீா் வரத்து இல்லாததால் ஏமாற்றமடைந்த மக்கள், தேங்கியிருந்த ஆற்று நீரில் கால்களை மட்டும் நனைத்து வழிபாடு செய்தனா்.
இதேபோல், மகாமகக் குளத்தில் நீராடி குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் அளித்து வழிபாடு மேற்கொண்டனா். அங்குள்ள கோயில் வளாகத்தில் இருந்த பசுக்கள் மற்றும் கால்நடைகளுக்கு அரிசி மற்றும் அகத்தி கீரைகளை வழங்கினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.