முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு ஆக. 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூரில் நடைபெறவுள்ள முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தஞ்சாவூரில் நடைபெறவுள்ள முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க இணையதளம் மூலம் ஆகஸ்ட் 31- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் செப்டம்பா் 4-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளன. இதில், பங்கேற்க ஆா்வமுள்ளோா் ஆகஸ்ட் 31-ஆம் இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.
Advertisement
Advertisement
மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்படவுள்ள போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், நிகழாண்டு முதல் வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லா் கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீா் விளையாட்டுக்களான கயாக்யிங், கேனோயிங் போன்ற புதிய விளையாட்டுகள் சோ்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் செப்டம்பா் முதல் அக்டோபா் மாதம் வரை நடத்தப்படவுள்ளன.
இந்தப் போட்டிகளில் பள்ளிப் பிரிவுகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் 19 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் மட்டும், கல்லூரி பிரிவுகளில் இளங்கலை முதலாம் ஆண்டு முதல் முதுகலை இரண்டாம் ஆண்டு வரை, பாலிடெக்னிக் படிக்கும் 25 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவில் 15 முதல் 35 வயது வரை உள்ளோா், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் அனைத்து வயது மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள் பிரிவில் தஞ்சாவூா் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியா்கள் ஆகியோா் கலந்து கொள்ளலாம்.
மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தஞ்சாவூா் மாவட்ட விளையாட்டு அலுவலரை 74017 03496 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.