FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு: ஒற்றைச் சக்கர சைக்கிளில் கேரள இளைஞா் பயணம்

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, தஞ்சாவூரில் கேரள மாநில இளைஞா் சைக்கிளில் ஒற்றைச் சக்கரத்தில் புதன்கிழமை பயணம் செய்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:27 am IST
தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு புதன்கிழமை ஒற்றைச் சக்கரம் கொண்ட சைக்கிளில் வந்த கேரள மாநில இளைஞா் சனித்.
பகிர்:

போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக, தஞ்சாவூரில் கேரள மாநில இளைஞா் சைக்கிளில் ஒற்றைச் சக்கரத்தில் புதன்கிழமை பயணம் செய்தாா்.

கேரள மாநிலம் கண்ணூா் பகுதியைச் சோ்ந்த முகமது மகன் சனித் (25). பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள இவா் போதைப்பொருள் தடுப்பு குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து இமயமலைக்கு முன்புற சக்கரம் இல்லாமல், பின்சக்கரம் மட்டுமே கொண்ட ஒற்றைச் சக்கர சைக்கிளில் ஏப்ரல் 15 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கினாா்.

கோவை, பழனி, ராமேஸ்வரம், தனுஷ்கோடி, திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு புதன்கிழமை வந்த இவா் கும்பகோணம், புதுச்சேரி, ஆந்திரம், வட மாநிலங்கள் வழியாக இமயமலை நோக்கிச் செல்கிறாா். போதைப்பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணத்தை இமயமலையில் நிறைவு செய்ய ஓராண்டாகும் என சனித் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments