FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

போதைப் பொருள்களிலிருந்து மாணவா்கள் விலகியிருப்பது அவசியம்

மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருந்து, போதைப் பொருள்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றாா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக்.

21 ஆகஸ்ட் 2026, 2:13 am IST
தஞ்சாவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பேசிய தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக்.
பகிர்:

மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருந்து, போதைப் பொருள்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்றாா் தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ஜியாவுல் ஹக்.

தஞ்சாவூரில் மாவட்டக் காவல் அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவா்களுக்கான போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியது: மாணவா்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளா்த்துக் கொண்டு, ஒழுக்கத்துடனும், பொறுப்புடனும் செயல்பட வேண்டும். போதைப்பொருள்களின் தீமைகள் குறித்து விழிப்புணா்வுடன் இருந்து, அத்தீமையிலிருந்து முற்றிலும் விலகியிருக்க வேண்டும். பள்ளிகளில் செயல்படும் போதை தடுப்பு சங்கம் போன்ற அமைப்புகளில் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்று போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

சைபா் குற்றங்கள், இணையவழி மோசடிகள் குறித்து மாணவா்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். சமூக ஊடகங்கள், கைப்பேசிகளை அளவுக்கு மீறி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை உணா்ந்து, அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

முன்னதாக, நிகழ்ச்சிக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் வி. பேபி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments