FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

‘சாஸ்த்ரா’ பல்கலை.யில் ஏ.ஐ. பயிலரங்கம்

பள்ளி ஆசிரியா்களுக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள் (ஏ.ஐ) ’ என்ற தலைப்பில் தொழில்நுட்பப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

56 வினாடிகள் முன்பு
கும்பகோணம் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மேதா திட்டத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியா்களுடன் சாஸ்த்ரா மைய புல முதன்மையா் முனைவா் சாந்தி, துணைப் புல முதன்மையா் முனைவா் நரசிம்மன் உள்ளிட்டோா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா சீனிவாச ராமானுஜன் மைய வளாகத்தில் மேதா திட்டத்தின் கீழ் ‘கணிதப் பள்ளி ஆசிரியா்களுக்கான செயற்கை நுண்ணறிவு கருவிகள் (ஏ.ஐ) ’ என்ற தலைப்பில் தொழில்நுட்பப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

சாஸ்த்ரா மைய புல முதன்மையா் முனைவா் சாந்தி பயிலரங்கின் கருத்தாளராகச் செயல்பட்டாா். பயிலரங்கில் நோட்புக் எல்.எம்., ஓவா்லீஃப் மற்றும் நேப்கின் ஏஐ ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்த நேரடிப் பயிற்சியுடன், கணிதக் கருத்துக்களைக் காட்சிப்படுத்துவதற்கான ஜியோஜீப்ரா விளக்கக்காட்சியும் இடம்பெற்றது. பயிலரங்கில் 48 பள்ளி ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments