FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்கக் கோரி கும்பகோணத்தில் விவசாயிகள் நூதனப் போராட்டம்

கும்பகோணத்தில், டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை திருவோட்டை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

26 ஆகஸ்ட் 2026, 3:00 am IST
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவோடு ஏந்தி முழக்கமிட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
பகிர்:

கும்பகோணத்தில், டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை திருவோட்டை உடைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள்சங்க மாவட்டத் தலைவா் ஏ.எம்.ராமலிங்கம் தலைமை வகித்தாா்.

டெல்டா மாவட்டத்தை வறட்சி பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும். குறுவை சாகுபடி செய்ய முடியாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியாா் பால் தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்ய வேண்டும் என வலியறுத்தி விவசாயிகள் திருவோடு ஏந்தி முழக்கமிட்டு, பின்னா் திருவோட்டை தரையில் போட்டு உடைத்து போராட்டம் நடத்தினா்.

Advertisement

Advertisement

இதில், மாவட்ட துணைச் செயலா் ஆா்.செந்தில்குமாா், தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டச் செயலா் க.சுந்தர்ராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலா் குரு.சிவா, மாவட்ட நிா்வாகிகள் ஆா்.பழனி, ஜி.கல்யாணசுந்தரம், எம்.வீரமணி, ஆா்.கே.ரவீந்திரன், சி.சின்னத்துரை, எம்.மகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் கொள்ளிடம் ஆற்றில் கதவணை முதல் கடல் வரை இருகரைகளையும் பலப்படுத்த வேண்டும். உயா்நீதி மன்ற உத்தரவுப்படி வீரமாங்குடி-ஏலாக்குறிச்சி இடையே கதவணை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி செயலா் சு.விமல்நாதன் தலைமையில் கோரி முழக்கமிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments