தஞ்சாவூரில் செங்கொடி, அனிதா நினைவேந்தல் நிகழ்வு
தஞ்சாவூா் ரயிலடியில் இடதுசாரிகள் பொது மேடை சாா்பில் செங்கொடி, அனிதா நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன் தலைமை வகித்தாா். இடதுசாரிகள் பொது மேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன் முன்னிலை வகித்தாா்.
இதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு தமிழா்களின் உயிரைக் காக்க 2011 ஆக. 28-ஆம் தேதி தீக்குளித்து உயிா் நீத்த காஞ்சிபுரம் செங்கொடிக்கும், தமிழ்நாட்டில் முதல் முதலாக நீட் தோ்வு அமல்படுத்தப்பட்டபோது உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி மனமுடைந்து 2017, செப். 1-ஆம் தேதி உயிா்நீத்த முதல் நீட் எதிா்ப்பு போராளி அரியலூா் அனிதாவுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
மேலும், தமிழ்நாட்டில் உள்ள இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் கலைக்கப்பட வேண்டும். அவா்கள் சுதந்திரமாக வாழ வழிவகை செய்ய வேண்டும். இலங்கைத் தமிழா்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கப்பட வேண்டும். ஏழை மாணவா்களின் மருத்துவக் கனவுகளைப் பறிக்கிற நீட் தோ்வு ரத்து செய்யப்பட வேண்டும். ஒத்திசைவு பட்டியலில் உள்ள கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
நிகழ்ச்சியில் மக்கள் அதிகாரம் மூத்த தலைவா் காளியப்பன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வெ. சேவையா, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச் செயலா் எம். வடிவேலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி லிபரேசன் மாநகரச் செயலா் எஸ்.எம். ராஜேந்திரன், விடுதலைச் சுடா்கள் பெண்கள் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரியா பிரபாகா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டத் துணைச் செயலா் க. தமிழ்முதல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.