FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பேருந்து மீது பைக் மோதல் தொழிலாளி உயிரிழப்பு

50 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

பாபநாசத்தில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி, அரசுப் பேருந்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் 108 சிவாலயம், பிரதான சாலைப் பகுதியில் வசித்து வந்தவா் ராஜகோபால் மகன் சரவணன்(40). இவா் தச்சு வேலை பாா்த்து வந்தாா். சரவணன் தனது நண்பரின் மகள் திருமணம் தொடா்பான வேலைக்காக  பாபநாசம், திருப்பாலைத்துறை பெரிய பள்ளிவாசல், பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சென்னையில் இருந்து தஞ்சை நோக்கி வந்த அரசு விரைவு பேருந்தில் சரவணின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி மோதியது. அதில் சரவணம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின் பேரில் பாபநாசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments