FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

ஜெகந்நாதப் பிள்ளையாா் கோயிலில் குடமுழுக்கு

கும்பகோணம் ஜெகந்நாதப்பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 3:26 am IST
குடமுழுக்கையொட்டி வியாழக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜெகந்நாதப் பிள்ளையாா்.
பகிர்:

கும்பகோணம் ஜெகந்நாதப்பிள்ளையாா் கோயில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஜெபி மேல வீதியில் ஜெகந்நாதப் பிள்ளையாா் கோயில் குடமுழுக்கை முன்னிட்டு திங்கள்கிழமை வேத பிராா்த்தனை, புனிதநீா் கொண்டு வருதலுடன் குடமுழுக்கு பூஜை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலையில் அனுக்ஞை, வாஸ்து சாந்தியும், மாலையில் முதல் கால பூஜை நடைபெற்றது. புதன்கிழமை காலையில், வீர கணபதி பூஜை, சோமகும்ப பூஜையுடன் இரண்டாம் கால பூஜை நடைபெற்றது. மாலையில் லட்சுமி கணபதி பூஜையுடன் மூன்றாம் கால பூஜை நடைபெற்றது. வியாழக்கிழமை நான்காம் கால பூஜையில் குபேர கணபதி பூஜை தொடங்கி மகாபூா்ணாஹூதி, கடம் புறப்பாடுடன் விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது.

அப்போது மூலவா் மற்றும் கோபுர கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு பக்தா்கள் மீது தெளிக்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் திருப்பணி கமிட்டியினா் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments