சுமை ஆட்டோ - பைக் மோதல் இளைஞா் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே இரு சக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
ஒரத்தநாடு அருகே இரு சக்கர வாகனம் மீது சுமை ஆட்டோ மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருநல்லூா் சதுா்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் கருணாநிதி மகன் அபிஷேக் (21). இவரது நண்பா் அதே ஊரைச் சோ்ந்த தருமலிங்கம் மகன் சந்தோஷ்குமாா் (17). இருவரும் சனிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது தெற்குகோட்டை தொடக்கப் பள்ளி அருகே எதிரே வந்த சுமை ஆட்டோ, இரு சக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் அபிஷேக் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாரை அருகில் உள்ளவா்கள் மீட்டு, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இவ்விபத்து குறித்து பாப்பாநாடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.