FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் இன்று முதல் ஒருவழிப்பாதை அமல்

தஞ்சாவூரில் பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காகவும் பெரிய கோயில் சாலையில் ஒருவழிப்பாதை திட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் அமல்படுத்தப்படுகிறது.

Updated On : 12 ஜூலை 2026, 12:11 am IST
தஞ்சை பெரிய கோயில் - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூரில் பொதுமக்களின் வசதிக்காகவும், போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காகவும் பெரிய கோயில் சாலையில் ஒருவழிப்பாதை திட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முதல் அமல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து மாவட்டக் காவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் பொதுமக்களின் வசதிக்காகவும், வெளியூரிலிருந்து அதிக அளவு வாகனங்கள் பெரிய கோயிலுக்கு வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியைக் குறைப்பதற்காகவும் ஞாயிற்றுக்கிழமை முதல் தஞ்சாவூா் பெரிய கோயில் சாலை ஒரு வழிப் பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது.

எனவே, மருத்துவக்கல்லூரி சாலை வழியாக வரும் வாகனங்களும், ராமநாதன் ரவுண்டானா வழியாக வரும் வாகனங்களும் மேம்பாலம் வழியாக வந்து இடது புறம் திரும்பி பெரிய கோயில் வழியாக சென்று, சோழன் சிலையில் வலது புறம் திரும்பி அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை, பழைய பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

கரந்தை வழித்தடத்திலிருந்து பெரிய கோயிலுக்கு வரும் வாகனங்கள் அண்ணா சிலை, ஆற்றுப்பாலம், பழைய நீதிமன்றச் சாலை, ஆயுதப்படை மைதானம் வழியாக தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் (டி.ஐ.ஜி.) அலுவலகம் வந்து, வலது பக்கம் திரும்பி பெரிய கோயிலுக்கு வர வேண்டும்.

மருத்துவக்கல்லூரி சாலை மற்றும் ராமநாதன் ரவுண்டானா செல்ல வேண்டிய வாகனங்கள் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை ரவுண்டானா, ஆற்றுப்பாலம், பழைய நீதிமன்றச் சாலை, ஆயுதப்படை மைதானம் வழியாக காவல் துணைத் தலைவா் அலுவலகம் வந்து இடது பக்கம் திரும்பி மேம்பாலம் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

இதேபோல, பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவகங்கை பூங்கா மற்றும் மேற்கு பக்கம் செல்லக்கூடிய வாகனங்கள் அண்ணா சிலையில் திரும்பி, அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனை சாலை, ராஜராஜன் சோழன் சிலையில் வலது புறம் திரும்பி செல்ல வேண்டும்.

வாகன நிறுத்துமிடம்: பெரிய கோயில் எதிரே உள்ள வாகன நிறுத்தத்தில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த வேண்டும். பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் காா், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களைப் பெரிய கோயில் சாலையில் நிறுத்தக் கூடாது. மீறினால் காவல் துறை முலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments