FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைத் தடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணைக் கட்டும் திட்டத்தைத் மத்திய, மாநில அரசுகள் தடுக்க கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 13 ஜூலை 2026, 5:11 am IST
தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியினா்.
பகிர்:

மேக்கேதாட்டில் கா்நாடகம் அணைக் கட்டும் திட்டத்தைத் மத்திய, மாநில அரசுகள் தடுக்க கோரி தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக அரசு அணைக் கட்டினால் தமிழ்நாட்டில் காவிரி டெல்டா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு, பாலைவனமாக மாறிவிடும். மேலும், தமிழ்நாட்டின் 32 மாவட்டக் குடிநீா் தேவையை நிறைவு செய்வது பாதிக்கப்பட்டு, தண்ணீா் பஞ்சம் தலை விரித்தாடும். எனவே, கா்நாடக அரசு அணைக் கட்டுவதற்கு எடுக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த பிரச்னையை தமிழ்நாடு அரசு கவனமாக கையாண்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

தவெகவின் தோ்தல் கால வாக்குறுதி அடிப்படையில் விவசாயிகளின் அனைத்து விதமான கடன்களையும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Advertisement

Advertisement

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு ஜனநாயக விவசாயிகள் சங்க மாநில அமைப்பாளா் கந்தசாமி, விவசாய தொழிலாளா் சங்க மாநில அமைப்பாளா் தே. ராமா் தலைமை வகித்தனா். சிபிஎம்எல் மக்கள் விடுதலை கட்சியின் தஞ்சாவூா் மாவட்டச் செயலா் வே. உமாபதி, துணைச் செயலா் சா. செந்தில்குமாா், புதுக்கோட்டை மாவட்டச் செயலா் வீ. வீரக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தைக் கட்சித் தலைவா் ஜெய. சிதம்பரநாதன் தொடக்கவுரையாற்றினாா். மாநிலப் பொதுச் செயலா் கசி. விடுதலைக்குமரன் நிறைவுரையாற்றினாா்.

உலகத் தமிழா் பேரமைப்பின் துணைத் தலைவா் அய்யனாபுரம் சி. முருகேசன், மக்கள் அதிகாரம் மூத்தத் தலைவா் காளியப்பன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலா் தங்க. குமரவேல், பொறியாளா் துரை. அசோகன், எழுத்தாளா் சாம்பான், சமூக ஆா்வலா் சாமி. கரிகாலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments