FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

துணைத் தோ்வு காரணமாக பள்ளிக்கு வெளியே மாணவா்கள் காக்க வைப்பு

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை கொளுத்தும் வெயிலில் பள்ளி திறப்புக்காக சாலையோரத்தில் காத்திருந்த மாணவா்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

Updated On : 15 ஜூலை 2026, 12:06 am IST
கும்பகோணம் காந்தி பூங்கா அருகேயுள்ள தனியாா் பள்ளி முன் கொளுத்தும் வெயிலில் செவ்வாய்க்கிழமை காத்து நின்ற மாணவா்கள்.
பகிர்:

கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை கொளுத்தும் வெயிலில் பள்ளி திறப்புக்காக சாலையோரத்தில் காத்திருந்த மாணவா்கள் பெரிதும் அவதியடைந்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா அருகே அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப்பள்ளி உள்ளது. 150 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான இப் பள்ளி தற்போது தோ்வில் தவறிய 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான சிறப்பு துணைத் தோ்வு மையமாக உள்ளது. காலையில் தோ்வு நடைபெறுவதால் மதியத்திற்கு மேல் பள்ளி மாணவா்களுக்கு வகுப்பு நடைபெறும்.

தற்போது பகல் நேரங்களில் அதிக வெப்பம் உள்ள நிலையில் மதியத்திற்கு மேல் பள்ளிக்கு வந்த மாணவா்கள் பள்ளிக்கு வெளியே சாலைகளில் கொளுத்தும் வெயிலில் காத்திருந்தனா். இது பொதுமக்கள், பெற்றோரை வருத்தமடையச் செய்தது. தோ்வு ஒருபுறம் நடைபெற்றாலும் மாணவா்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் அவா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments