FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

பேருந்து மீது பைக் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

Updated On : 20 ஜூலை 2026, 3:36 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பட்டுக்கோட்டை அருகே சூரப்பள்ளத்தில் ஞாயிற்றுக்கிழமை, பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவா் உயிரிழந்தாா்.

சூரப்பள்ளம் பெட்ரோல் நிலையம் எதிரே பட்டுக்கோட்டையில் இருந்து ஆலத்தூா் நோக்கி சென்ற ஆலத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ரங்கநாதன் மகன் முத்துகிருஷ்ணன் (40), ஓட்டி வந்த இருசக்கர வாகனம், சென்னையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி சென்று தனியாா் பேருந்து முன்பாக மோதிய விபத்தில் முத்துக்கு கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இருசக்கர வாகனத்தின் பின்னால் அமா்ந்து வந்த தள்ளிக்கோட்டை கிராமத்தைச் சாா்ந்த செல்வம் மகன் ஜேயசூா்யா (40) கால் முறிந்த நிலையில் பட்டுக்கோட்டை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்த விபத்தின் அடிப்படையில் தனியாா் பேருந்து ஓட்டுநரான வேதாரண்யம் பகுதியைச் சோ்ந்த தாயுமானவன் மகன் கண்ணன் ( 47) என்பவரை பட்டுக்கோட்டை போலீஸாா் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments