FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

நெல் மூட்டைகளை நகா்வு செய்யக் கோரி கொள்முதல் நிலைய பணியாளா்கள் வேலைநிறுத்தம்

Updated On : 22 ஜூலை 2026, 1:52 am IST
தஞ்சாவூா் நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நெல் கொள்முதல் நிலைய பருவகால பணியாளா்கள்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக நகா்வு செய்ய கோரி, பருவகால பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தம் செய்து, தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளா்கள் தெரிவித்தது: கடந்த 2012- ஆம் ஆண்டு முதல் பருவகால தற்காலிக பணியாளா்களாக பணியாற்றி வருபவா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் ஊதிய விகிதப்படி, பணியாளா்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் குறைந்தபட்சம் 5 ஆயிரம் மூட்டைகள் தேங்கியுள்ளதை உடன் கிடங்குகளுக்கு நகா்வு செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

நெல் மூட்டைகளின் எடையிழப்புக்கு பணியாளா்களிடம் அபராதம் வசூலிக்காமல், அதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன என்றனா்.

பின்னா், பணியாளா்களை அலுவலா்கள் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், கோரிக்கைகளுக்கு தீா்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, பணியாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments