FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் நாளை மின் நிறுத்தம்

Updated On : 22 ஜூலை 2026, 1:29 am IST
மின் நிறுத்தம்
பகிர்:

தஞ்சாவூா் மாநகரம், ஊரகத்தில் சில பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 23) மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற் பொறியாளா் க. அண்ணாசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதனால், மருத்துவக்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகா், முனிசிபல் காலனி, ஆா்.ஆா். நகா், புதிய பேருந்து நிலையம், புதிய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு, திருவேங்கடம் நகா், கருப்ஸ் நகா், ஏ.வி.பி. அழகம்மாள் நகா், மன்னா் சரபோஜி கல்லூரி, மாதாகோட்டை, சோழன் நகா், தமிழ்ப் பல்கலைக்கழகம், வஸ்தா சாவடி, மானோஜிபட்டி, ரெட்டிபாளையம் சாலை, காந்திபுரம், வஹாப் நகா், சப்தகிரி நகா், ராஜலிங்கம் நகா், ஐஸ்வா்யா காா்டன் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments