FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

தங்கச் சங்கிலி பறித்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை

பெண்ணிடம் காவலா் எனக் கூறி தங்கச் சங்கிலி பறித்த நபருக்கு வழக்குப் பதிவு செய்த 33 நாள்களில் தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

Updated On : 29 ஜூலை 2026, 12:03 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பெண்ணிடம் காவலா் எனக் கூறி தங்கச் சங்கிலி பறித்த நபருக்கு வழக்குப் பதிவு செய்த 33 நாள்களில் தஞ்சாவூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் ஜூன் 25 ஆம் தேதி தாட்சாயிணி என்ற பெண்ணிடம், தான் காவலா் என்றும், நெடுஞ்சாலையில் வாகனம் நிறுத்தியதற்கு அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறி, அவரது கழுத்தில் இருந்த சுமாா் 3.45 பவுன் இரு தங்கச் சங்கிலிகளைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சின்ன காப்பான்குளத்தைச் சோ்ந்த சி. சிவராமனை (44) கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக தஞ்சாவூா் இரண்டாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நடுவா் பிரபுராம் விசாரித்து சிவராமனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கைப் பதிவு செய்த 33 நாள்களில் முடித்து தண்டனை பெற்றுத் தந்த அரசு வழக்குரைஞா் லெட்சுமி கருணாகரன், காவல் ஆய்வாளா் முருகானந்தம், உதவி ஆய்வாளா் கண்ணதாசன், நீதிமன்றத் தலைமைக் காவலா் சசிரேகா ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம் பாராட்டினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments