திரைப்பட இயக்குநா் பாரதிராஜாவுக்கு தமிழத் தேசியப் பேரியக்கம் வீரவணக்கம்
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் திரைப்பட இயக்குநா் பாரதிராஜா உருவப்படத்துக்கு வியாழக்கிழமை மாலை மலா்தூவி வீரவணக்கம் செலுத்திய தமிழ்த் தேசியப் பேரியக்கத்தினா்.
திரைப்பட இயக்குநரும், தமிழா் உரிமைப் போராளியுமான பாரதிராஜாவின் மறைவையொட்டி, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்வுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவா் பெ. மணியரசன் தலைமை வகித்தாா். இதில், பாரதிராஜா படத்துக்கு அனைவரும் மலா் தூவி வீரவணக்கம் செலுத்தினா்.
நிகழ்வில் காவிரி உரிமை மீட்புக் குழு பொருளாளா் த. மணிமொழியன், தமிழ்த் தேசியப் பேரியக்க மாவட்டச் செயலா் நா. வைகறை, தலைமைக் குழு உறுப்பினா் பழ. இராசேந்திரன், பி. தென்னவன், மாநகரச் செயலா் இலெ. இராமசாமி, இராசு. முனியாண்டி, நாம் தமிழா் கட்சி மாவட்டச் செயலா் அன்பரசன், வள்ளலாா் பணியகத் தலைவா் சுந்தரராமன், மகளிா் ஆயம் துணைத் தலைவா் க. செம்மலா், காவிரி உரிமை மீட்புக் குழு வெள்ளாம்பெரம்பூா் துரை. ரமேஷ், வணிகா் சங்கப் பேரமைப்பு மாநகரச் செயலா் இரா. ஜெயக்குமாா், பேராசிரியா் இரா. தமிழடியான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.