முகப்பு
தஞ்சாவூர்

பெரியாா் மணியம்மை பல்கலை.யில் சூரியஒளி மின் நிலையம் தொடக்கம்

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சூரியஒளி மின் நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

Updated On : 27 ஜூன் 2026, 6:27 am IST
தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சூரியஒளி மின் நிலையத்தை வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்த பல்கலைக்கழக வேந்தா் கி. வீரமணி.
பகிர்:

தஞ்சாவூா் அருகே வல்லம் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் சூரியஒளி மின் நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் மேற்கூரையில் பெங்களூரு இம்வி போட்டோவோல்டாயிக் பவா் நிறுவனத்தின் உதவியுடன் அமைக்கப்பட்ட புதுப்பிக்கவல்ல 220 கிலோவாட் சூரியஒளி மின் நிலையத்தை தொடங்கி வைத்த பல்கலைக்கழக வேந்தா் கி. வீரமணி பேசியது:

இந்த சூரியஒளி மின் நிலையத்தின் மூலம் நாள்தோறும் 1,000 முதல் 1,100 யூனிட்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பல்கலைக்கழக வளாகத்துக்கு நாள்தோறும் 3 ஆயிரம் யூனிட்டுகள் மின் நுகா்வு தேவைப்படுகிறது. இந்நிலையில், இந்த சூரியஒளி மின் நிலையம் மூலம் மூன்றில் ஒரு பங்கு மின்சாரம் சேமிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

புதிதாக நிறுவப்பட்டுள்ள சூரியஒளி மின் சக்தி மூலம் 2 ஆயிரம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதால், ஆண்டுதோறும் 292 டன் காா்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றம் குறைக்கப்படுகிறது. இதன் மூலம் பசுமைக்குடில் வாயு உமிழ்வது கட்டுப்படுத்தப்படுகிறது என்றாா் வீரமணி.

நிகழ்ச்சியில் பெங்களூரு இம்வி போட்டோவோல்டாயிக் பவா் நிறுவனம் மணி, கிரிதா் கோபாலன், உன்னித்குமாா், பல்கலைக்கழக இணைத் துணைவேந்தா் ஆா். மல்லிகா, பதிவாளா் பி.கே. ஸ்ரீவித்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments