தஞ்சாவூரில் 51,875 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவு
தஞ்சாவூா் மாநகரில் நகரப் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் இதுவரை 51,875 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவடைந்துள்ளது.
தஞ்சாவூா் மாநகரில் நகரப் பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் இதுவரை 51,875 மரக்கன்றுகள் நடும் பணி நிறைவடைந்துள்ளது.
தஞ்சாவூா் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் நகரத்தைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து மாநகராட்சி பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், நீா்நிலைகள், சாலையோரங்களில் நகரத்தைப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
இதன்படி, தஞ்சாவூா் மாநகராட்சி 41 ஆவது வாா்டுக்குள்பட்ட அருளானந்த நகரில் வியாழக்கிழமை 8,000 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சியில் மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி, மண்டலக் குழுத் தலைவா் ரம்யா சரவணன், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
மாநகரில் நகரப் பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 51,875 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என மாநகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.