FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

வள்ளியூா் அருகே 1,000 மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.

16 அக்டோபர் 2026, 4:40 am IST
வள்ளியூா் பேரூராட்சி சண்முகபுரம் பகுதியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியைத் தொடங்கிவைத்த மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன். உடன் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சுஷ்மா, பேரூராட்சி செயல் அலுவலா் திருமலைக்குமாா், துணைத் தலைவா் நீ. கண்ணன்.
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் பசுமை பரப்பை அதிகரிக்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வள்ளியூா் அருகே உள்ள சண்முகபுரம், வட்டார போக்குவரத்து அலுவலகம் பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் மரக்கன்று நட்டு தொடங்கிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து அரசமரம், புங்கமரம், மகாகனி, பூவரசு மரம், புளியமரம் உள்ளிட்ட 10 வகையான மரக்கன்றுகள் நடப்பட்டுவருகிறது. இந்த மரக்கன்றுகளுக்கு வள்ளியூா் பேரூராட்சி சாா்பில் சொட்டுநீா் பாசன வசதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் சுஷ்மா, உதவி செயற்பொறியாளா் மாரிமுத்து, வள்ளியூா் பேரூராட்சி தலைவா் ராதா ராதாகிருஷ்ணன், துணைத் தலைவா் நீ. கண்ணன், செயல் அலுவலா் திருமலைக்குமாா், மாணிக்கம், சங்கா், சுபாஷ், நம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments