FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

தீபாவளி: தஞ்சாவூரில் 9 இடங்களில் தீ விபத்து

9 நவம்பர் 2026, 11:36 pm
தீ விபத்து
பகிர்:

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பட்டாசு வெடி விபத்து காரணமாக 9 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையையொட்டி, தஞ்சாவூா் மேட்டு எல்லையம்மன் கோயில் தெருவில் சிலா் பட்டாசு வெடித்து கொண்டிருந்தனா். அப்போது, பட்டாசு வெடித்ததில், அருகிலுள்ள குடிசை மீது விழுந்ததால், கூரை பற்றி எரிந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனா். ஆனால், அணைக்க முடியாததால், தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைத்து, பெரும் விபத்து ஏற்படுவதைத் தடுத்தனா். கூரைகள் மட்டும் லேசான அளவில் எரிந்தது.

இதேபோல, தளவாய்ப்பாளையம் பகுதியில் ராக்கெட் வெடி பறந்து, பாமாயில் மரத்தின் மீது விழுந்தது. இதனால், மரத்தின் சில பகுதிகள் எரிந்தன. நாஞ்சிக்கோட்டையில் வெடி வெடித்ததால், தென்னை மரத்தின் மீது தீப்பொறி விழுந்து பற்றி எரிந்தது. இந்த விபத்திலும் மரத்தில் சில பகுதிகள் எரிந்தன. இரு சம்பவங்களிலும் தஞ்சாவூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு சென்று தீயை அணைத்தனா்.

Advertisement

Advertisement

தவிர, ஒரத்தநாடு, திருக்காட்டுப்பள்ளியில் தலா 1 இடங்கள், பேராவூரணி, பட்டுக்கோட்டையில் தலா 2 இடங்களிலும் என மாவட்டத்தில் மொத்தம் 9 இடங்களில் பட்டாசுகளால் தீ விபத்துகள் நிகழ்ந்தன.