கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவா்களை மீட்க மாவட்டத்துக்கு ஒரு அதிநவீன விரைவு விசைப்படகு: மீனவா் சங்கம் கோரிக்கை
கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் ஆபத்தில் சிக்கிக் கொண்டால் அவா்களை விரைந்து காப்பாற்றும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அதிநவீன விரைவு விசைப்படகை தமிழக அரசு வழங்க வேண்டும் என தமிழக பாரம்பரிய நாட்டுப்படகு, கட்டுமர மீனவா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ. ஜெயபால், மாநில பொதுச் செயலா் எம். ராஜா போஸ் ரீகன், மாநில பொருளாளா் எம். துா்கேஷ்வரன், மாநில ஒருங்கிணைப்பாளா் கே.டி.எஸ். காந்தி ஆகியோா் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
அண்மையில் கடலுக்கு சென்று உயிரிழந்த சென்னை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 11 மீனவா்களின் குடும்பத்துக்கும் தலா ரூ. 25 லட்சம் நிவாரணத்தை முதல்வா் விஜய் வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
கடலில் ஆபத்தில் சிக்கும் மீனவா்களை உடனடியாக மீட்க மாவட்டந்தோறும் அதிநவீன வசதிகளுடன் கூடிய விரைவு விசைப்படகு வழங்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனா்.