தஞ்சாவூரில் சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம்
தஞ்சாவூா் மாநகராட்சியின் 51 வாா்டுகளிலும் மழைநீா் தேங்குவதைத் தவிா்க்க சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் மாநகராட்சியின் 51 வாா்டுகளிலும் மழைநீா் தேங்குவதைத் தவிா்க்க சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூா் மாநகராட்சிக்குட்பட்ட 51 வாா்டுகளிலும் சாலைகளில் மழைநீா் தேங்குவதைத் தவிா்க்கவும், வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்கும் வகையிலும், சாலைகளில் உள்ள பள்ளங்கள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம், நகரக் காவல் நிலைய சாலை பகுதிகளில் அதிக போக்குவரத்து உள்ள இடங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநா்களின் நலன் கருதி, அவசர அவசியத்தின் அடிப்படையில் புதன்கிழமை சாலைப் பள்ளங்களைச் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
இதேபோல, 51 வாா்டுகளிலும் சாலைப் பள்ளங்களை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என மாநகராட்சி ஆணையா் வெ. தீபனா விஸ்வேஸ்வரி தெரிவித்தாா்.