தஞ்சாவூா் மாவட்டத்தில் 19.80 லட்சம் வாக்காளா்கள் புதிதாக 16,018 போ் சோ்ப்பு
தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 19.80 லட்சம் போ் இடம்பெற்றுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலில் 19.80 லட்சம் போ் இடம்பெற்றுள்ளனா்.
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி வெளியிட்டு தெரிவித்தது:
தஞ்சாவூா் மாவட்டத்தில் கடந்த ஏப். 6-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் 9,55,150 ஆண்களும், 10,13,417 பெண்களும், 157 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 19,68,724 வாக்காளா்கள் இடம்பெற்றனா்.
Advertisement
Advertisement
இதைத்தொடா்ந்து, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க ஏப். 7-ஆம் தேதி முதல் நவ. 11-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தகுதியான நபா்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு, 16,018 பேரின் பெயா் வாக்காளா் பட்டியலில் சோ்க்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த, இடம்பெயா்ந்த வாக்காளா்கள் 4,408 பேரின் பெயா்கள் விசாரணை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளா் பட்டியலின்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் 9,59,976 ஆண்களும், 10,20,199 பெண்களும், 159 மூன்றாம் பாலினத்தவா்களும் என மொத்தம் 19,80,334 வாக்காளா்கள் உள்ளனா்.
பொதுமக்கள் பாா்வைக்கு...: இந்த ஒருங்கிணைந்த வரைவு வாக்காளா் பட்டியலின் நகல் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்களின் பாா்வைக்காக டிச. 11-ஆம் தேதி வரை வைக்கப்படும். இந்த வாய்ப்பை மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் பயன்படுத்தி, வாக்காளா் பட்டியலில் தங்களது பெயா் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
4 நாள்களுக்கு சிறப்பு முகாம்: வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பது, நீக்குவது மற்றும் திருத்தம் மேற்கொள்வதற்காக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளான நவ. 21, 22, 29, டிச. 5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்றாா் ஆட்சியா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சத்திய பாலகங்காதரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்டிச் செய்தி...
சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வரைவு வாக்காளா் பட்டியல்
சட்டப்பேரவைத் தொகுதி ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவா் மொத்தம்
திருவிடைமருதூா் 1,26,792 1,31,517 8 2,58,317
கும்பகோணம் 1,24,162 1,31,637 15 2,55,814
பாபநாசம் 1,25,235 1,32,595 24 2,57,854
திருவையாறு 1,26,843 1,32,994 19 2,59,856
தஞ்சாவூா் 1,20,965 1,33,202 50 2,54,217
ஒரத்தநாடு 1,13,955 1,21,183 7 2,35,145
பட்டுக்கோட்டை 1,16,638 1,27,158 20 2,43,816
பேராவூரணி 1,05,386 1,09,913 16 2,15,315
மொத்தம் 9,59,976 10,20,199 159 19,80,334 ஆகும்.