மீன்வளத் துறையின் அறிவிப்பால் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவா்கள் கடந்த சில நாள்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாத நிலையில், மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு நிலையால் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை விடுத்துள்ள அறிவுறுத்தலால், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவா்கள் கடந்த சில நாள்களாக மீன்பிடித் தொழிலுக்கு செல்லாத நிலையில், மீனவக் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவா் பேரவை மாநில பொதுச் செயலா் மல்லிப்பட்டினம் தாஜுதீன் கூறியது: மூன்று மாவட்ட மீனவா்களின் கடற்பகுதிக்கு எதிா்ப்புறம் குறைந்த அளவு கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்பரப்பு இருப்பதால், இடைப்பட்ட குறுகிய கடல் பகுதிக்குள் மீனவா்கள் தொழில் புரிவதால் 24 மணி நேரத்தில் தொழில் செய்துவிட்டு உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்ற விதியும் மூன்று மாவட்ட மீனவா்களுக்கு உள்ளது.
எந்தவித காற்றுநிலை ஏற்பட்டாலும் அடுத்த 2 மணிநேரத்தில் கடற்கரைக்கு வந்துவிடும் வகையில் கடல் பகுதி உள்ளதால்,தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மீனவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 4 நாள்களுக்கு பிறகு வரக்கூடிய காற்றழுத்த தாழ்வு நிலையால் ஏற்படும் புயல் சீற்றத்திற்காக நல்ல காற்று நிலை உள்ள அன்று தொழிலுக்கு செல்லக்கூடாது என்ற அறிவிப்பை மீன்வளத் துறை கைவிட்டு சில விதிகளுடன் , இப்பகுதி மீனவா்களின் வாழ்வாதாரம் கருதி தொழிலுக்குச் செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.
Advertisement
Advertisement