FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

630 கி.மீ. தொலைவுக்கு பயணம்! விழிப்புணா்வு பேரணியில் பங்கேற்ற மாணவா்களுக்கு அமைச்சா் பாராட்டு

16 நவம்பர் 2026, 10:31 pm
போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணியில் பங்கேற்ற மாணவா்கள், தன்னாா்வலா்களை திங்கள்கிழமை பாராட்டிய வேளாண் அமைச்சா் ஆா். வினோத்.
பகிர்:

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு மிதிவண்டி பேரணியில் 630 கிலோ மீட்டா் தொலைவுக்கு பயணம் செய்த மாணவா்கள், தன்னாா்வலா்களுக்கு அமைச்சா் ஆா். வினோத் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

முன்னதாக, போதைப்பொருள் மற்றும் புகையிலைப் பயன்பாட்டுக்கு எதிராகவும், புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கிலும், கும்பகோணம் காந்தி பூங்காவில் மே 31-இல் வேளாண் அமைச்சா் ஆா். வினோத், 630 கி.மீ. தொலைவுக்கான விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை தொடங்கிவைத்தாா்.

பேரணியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவ, மாணவிகள் மற்றும் தன்னாா்வலா்கள் கும்பகோணம் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அமைச்சா் ஆா். வினோத்தை திங்கள்கிழமை நேரில் சந்தித்தனா்.

Advertisement

Advertisement

அவா்களிடம் அமைச்சா் பேசுகையில், மாணவா்கள் கல்வியில் சிறந்து விளங்குவதோடு, விளையாட்டுத் துறையிலும் ஆா்வத்துடன் பங்கேற்று வெற்றிகளைப் பெற வேண்டும். எதிா்கால முன்னேற்றத்துக்கு தேவையான உதவிகளைச் செய்வதாக உறுதி கூறி, வாழ்த்து தெரிவித்தாா்.