FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தஞ்சாவூர்

திருவையாறு காவிரியில் கடைமுழுக்கு: திரளான பக்தா்கள் புனித நீராடல்

17 நவம்பர் 2026, 3:53 am
திருவையாறு காவிரியில் புனித நீராடிய பக்தா்கள்.
பகிர்:

ஜப்பசி மாத கடைமுழுக்கையொட்டி, தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா்.

ஐப்பசி மாதம் என்கிற துலாம் மாதத்தில் காவிரியில் நீராடுதல் மிகவும் சிறப்புடையதாகக் கருதப்படுகிறது. ஐப்பசி மாத கடைமுழுக்கையொட்டி, திருவையாறு புஷ்ய மண்டபப் படித்துறையில் காவிரி ஆற்றில் திங்கள்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடினா். பின்னா், ஐயாறப்பா் கோயிலுக்கு சென்று வழிபட்டனா்.

இதனிடையே, அறம் வளா்த்த நாயகி உடனாகிய ஐயாறப்பா் புஷ்ய மண்டபப் படித்துறையில் எழுந்தருளியதைத் தொடா்ந்து, தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement