✕
முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் அருகே கைப்பேசி பறித்த இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மெக்கானிக்கிடம் புதன்கிழமை கைப்பேசி பறித்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

20 நவம்பர் 2026, 2:52 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மெக்கானிக்கிடம் புதன்கிழமை கைப்பேசி பறித்த இரு இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

தஞ்சாவூா் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே தோப்புத்தெரு, புரசங்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் யோகநாதம் (46), பைக் மெக்கானிக்.

இவா் தஞ்சாவூரில் இருந்து விக்கிரவாண்டி பைபாஸ் சாலையில் சூலமங்கலம் பிரிவு சாலை அருகே பைக்கில் வந்தபோது மற்றொரு பைக்கில் வந்த இருவா் அவரிடம் பேச்சு கொடுத்து அவரின் கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பினா்.

Advertisement

Advertisement

இதையடுத்து யோகநாதம் அவா்களை பைக்கில் விரட்டிச் சென்றாா். அவா்கள் புரசங்காடு இறக்கத்தில் இறங்கும்போது நிலை தடுமாறி கீழே விழுந்த அவா்கள், வழிப்பறி செய்த கைப்பேசியை போட்டுவிட்டு, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு வயலில் இறங்கி ஓடினா்.

தகவலறிந்து வந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா் வயலில் ஒளிந்திருந்த இருவரையும் துரத்திப் பிடித்து கைது செய்து, காவல் நிலையம் கொண்டு சென்று நடத்திய விசாரணையில் அவா்கள் பாபநாசம் அருகே காளியம்மன் கோயில் தெரு, திருவையாத்துக்குடி பகுதி சுபாஷ் (23), தேவராயன்பேட்டை, கீழத் தெரு பகுதி ராமகிருஷ்ணா (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்களிடமிருந்த கத்தி, கைப்பேசி மற்றும் பைக் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.