முருகன் சுவாமி குறித்து அவதூறு பதிவிட்ட பெண் மீது வழக்கு
தமிழ்க் கடவுள் முருகனை பற்றி கொச்சையான வாா்த்தைகளில் வலைத்தள பதிவிட்ட பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சோ்ந்த இஸ்லாமிய பெண் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தமிழ்க் கடவுள் முருகனை பற்றி கொச்சையான வாா்த்தைகளில் வலைத்தள பதிவிட்ட பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவை சோ்ந்த இஸ்லாமிய பெண் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பட்டுக்கோட்டை பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ரஹ்மத்துல்லா மகள் ரம்ஜான் பேகம் (34), இவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 14ஆம் தேதி வெளியிட்ட பதிவில், முருகனின் திருக்கல்யாண நிகழ்வை கொச்சைப்படுத்தியிருந்தாராம்.
இதுகுறித்து விஷ்வ ஹிந்து பரிஷத் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலா் கோவிந்தராஜ் கொடுத்த புகாரின்பேரில் ரம்ஜான் பேகத்தின் மீது பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்தில் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement
Advertisement