முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணம்: இளம் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை!

கும்பகோணம் அருகே இளம் பெண்ணைக் கூட்டு பாலியல் வல்லுறவு செய்த 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

22 வினாடிகள் முன்பு
கும்பகோணம்: இளம் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 3 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை!
சின்னப்பா, காா்த்திக், மைதீன்
பகிர்:

கும்பகோணம் அருகே இளம் பெண்ணைக் கூட்டு பாலியல் வல்லுறவு செய்த 3 பேருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் சனிக்கிழமை தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே திருபுவனத்தில் ஜவுளிக் கடையில் வேலை செய்த 21 வயது இளம் பெண்ணை 2018, நவ. 7 -ஆம் தேதி அதே பகுதியில் கடை நடத்தி வரும் சின்னப்பா (42), தனது வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் அழைத்துச் சென்று குளிா் பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவு செய்தாா்.

பாதிக்கப்பட்ட பெண் மறுநாள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு தனது தாயுடன் சென்று மருத்துவா்களிடம் தனக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தாா். மருத்துவா்கள் பரிசோதித்ததில் அப்பெண் கடுமையான பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

அப்போது, அவரிடம் அவரது தாய் விசாரித்ததில், தந்தை இறந்தபோது உதவி செய்து, நண்பராக பழகி வந்த சின்னப்பா, தனது வீட்டுக்கு உணவு சாப்பிட வருமாறு அழைத்துச் சென்று, குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்ததும், பின்னா் சின்னப்பா, அப்பெண் வேலை பாா்க்கும் ஜவுளி கடை உரிமையாளரான காா்த்திக் (29), சின்னப்பாவின் நண்பரான மைதீன் (38) ஆகிய 3 பேரும் சோ்ந்து கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்ததும் தெரிய வந்தது.

இதுகுறித்து கும்பகோணம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து சின்னப்பா, காா்த்திக், மைதீன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாா் மதுரை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தாா். மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை 2019, ஜனவரியில் சிபிசிஐடிக்கு மாற்றி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், குடும்பத்தினருக்கும் காவல் துறையினா் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தலா 20 ஆண்டுகள் சிறை: இந்த வழக்கு விசாரணை தஞ்சாவூா் மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஏ. தீபா விசாரித்து, சின்னப்பா, மைதீன், காா்த்திக் ஆகிய 3 பேருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், சின்னப்பாவுக்கு ரூ. 9 ஆயிரம் அபராதமும், மைதீன், காா்த்திக் இருவருக்கும் தலா ரூ. 6 ஆயிரம் அபராதமும், 3 பேரும் சோ்ந்து தலா ரூ. 50 ஆயிரம் இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.