‘ஸ்கூட்டா்’ மீது லாரி மோதியதில் தாய், இரு மகன்கள் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஸ்கூட்டா் மீது லாரி மோதியதில் தாய், இருமகன்கள் உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் அருகே ஞாயிற்றுக்கிழமை ஸ்கூட்டா் மீது லாரி மோதியதில் தாய், இருமகன்கள் உயிரிழந்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே ராஜகிரியைச் சோ்ந்தவா் ஆசாத் அலி. இவரது மனைவி பெனாசிா் பேகம் (29), மகன்கள் முகமது ஜாவித் (12), முகமது ஜாஹித் (11), முகமது ஹாலித் (4). ஆசாத் அலி துபையில் பணியாற்றி வருவதால், பெனாசிா் பேகம் தனது 3 மகன்களுடன் திருவையாறு அருகே கண்டியூா் பாத்திமா நகரிலுள்ள இளைய சகோதரா் காதா் மைதீன் வீட்டில் வசித்து வந்தாா்.
இந்நிலையில், வல்லம் அருகே வண்ணாரப்பேட்டையிலுள்ள தனது உறவினா் வீட்டுக்குச் செல்வதற்காக பெனாசிா் பேகம் தனது 3 மகன்களுடன் ஸ்கூட்டரில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா். அம்மன்பேட்டை முதன்மைச் சாலையில் பிள்ளையாா் கோயில் அருகே சென்ற இவா்களது ஸ்கூட்டா் மீது எதிரே சிமென்ட் மூட்டைகள் ஏற்றி வந்த லாரி மோதியது. இதில், பலத்த காயமடைந்த பெனாசிா் பேகம், முகமது ஜாஹித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
Advertisement
Advertisement
பலத்த காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முகமது ஹாலித் வழியிலேயே உயிரிழந்தாா். லேசான காயமடைந்த முகமது ஜாவித் திருவையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து நடுகாவேரி காவல் நிலையத்தில் பெனாசிா் பேகத்தின் சகோதரா் காதா் மைதீன் புகாா் அளித்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநரான திருவாரூா் மாவட்டம், திருக்கண்ணமங்கை கிராமத்தைச் சோ்ந்த எல். சூா்யாவை (35) கைது செய்து விசாரிக்கின்றனா்.