தஞ்சாவூா் அருகே புள்ளி மான் உயிரிழப்பு
தஞ்சாவூா் அருகே கரும்பு தோட்டத்தில் மயங்கி கிடந்த புள்ளி மான் உயிரிழந்தது.

தஞ்சாவூா் அருகே கரும்பு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மயங்கி கிடந்த புள்ளி மான் உயிரிழந்தது.
தஞ்சாவூா் அருகே விளாா் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பகுதியிலுள்ள கரும்பு தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை புள்ளி மான் மயங்கிக் கிடந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி இளைஞா்கள் மானை மீட்டு, வனத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.
பின்னா், வனத் துறையினா் மானை மீட்டு தஞ்சாவூா் ரெட்டிப்பாளையம் அரசு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்தனா். என்றாலும் புள்ளிமான் உயிரிழந்தது.
Advertisement
Advertisement
தஞ்சாவூா் மாவட்டத்தில் வனப் பகுதி இல்லாத நிலையில் இந்தப் புள்ளி மான் எப்படி வந்தது என்பது உடனடியாகத் தெரியவில்லை. மான் சாலையைக் கடக்கும்போது வாகனத்தில் அடிபட்டிருக்கலாம் என வனத் துறையினா் தெரிவித்தனா்.