தஞ்சாவூா் மாவட்டத்தில் 1.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து!
தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களில் 1.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்களில் 1.80 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்தாா்.
துணைத் தேசிய தடுப்பூசி நாளையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் கல்லுக்குளம் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் இம்முகாமை மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தொடங்கி வைத்துத் தெரிவித்தது:
மாவட்டத்தில் ஐந்து வயதுக்குள்பட்ட சுமாா் 1.80 லட்சம் குழந்தைகளுக்கு 2 சொட்டு போலியோ மருந்து புகட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக மாவட்டத்தில் 1,609 மையங்கள் அமைக்கப்பட்டு, 6,436 பணியாளா்கள் மற்றும் 217 மேற்பாா்வையாளா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். நெடுந்தொலைவு பகுதிகள் மற்றும் இடம்பெயா்ந்து வசிக்கும் குழந்தைகளுக்காக 77 நடமாடும் குழுக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டன என்றாா் ஆட்சியா்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன், தஞ்சாவூா் மாநகராட்சி மேயா் (பொ) அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி ஆணையா் வெ, தீபனா விஸ்வேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பாபநாசம்: பாபநாசம் ஒன்றியம், கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சிக்குள்பட்ட பட்டுக்குடி, புத்தூா், குடிகாடு, நாயக்கா் பேட்டை உள்ளிட்ட அங்கன்வாடிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.