தஞ்சாவூரை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தல்

தஞ்சாவூா், நவ. 25: தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் புதன்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோட்டாட்சியா் ப. நித்யா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கருத்துகள்:
தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ்: தஞ்சாவூா் மாவட்டத்தில் குறுவையும் பொய்த்து, சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே, தஞ்சாவூா் மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து, ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
Advertisement
Advertisement
பெரமூா் ஆா். அறிவழகன்: நீா்வழித் தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அம்மையகரம் ஏ.கே.ஆா். ரவிச்சந்தா்: தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க்கடன் தள்ளுபடியில் ரூ. 75 ஆயிரத்துக்கும் அதிகமாக கடன் வாங்கிய விவசாயிகளுக்கு மீதமுள்ள தொகையை நவ. 30 ஆம் தேதிக்குள் செலுத்தினால் அனைத்து வட்டிகளும் தள்ளுபடி என்றும், புதிய கடன் பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி, இச்சலுகைகளைப் பெற டிச. 15-ஆம் தேதி வரை காலநீட்டிப்பு செய்ய வேண்டும்.
கூத்தூா் எம். ரெங்கராஜன்: கல்லணைக் கால்வாயை நம்பி கல்விராயன்பேட்டை, ஆற்காடு, வைரபெருமாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கா் சம்பா பயிா் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கல்லணைக் கால்வாயில் தண்ணீா் வராததால், பயிா்களைக் காப்பாற்ற ஆற்றிலிருந்து டீசல் என்ஜின் மூலம் தண்ணீா் இறைத்து பாய்ச்சப்படுகிறது. இதற்காகும் டீசல் செலவை அரசு மானியமாக வழங்க வேண்டும்.
வாளமா்கோட்டை வி.எஸ். இளங்கோவன்: நீா் மேலாண்மையைச் சிறப்பாகச் செயல்படுத்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். இது தொடா்பாக வட்டார வளா்ச்சி அலுவலா்கள், வருவாய், நீா்வளத் துறை அலுவலா்கள் வாரத்துக்கு ஒரு நாள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணத்திடல் எஸ். சிவக்குமாா்: தமிழக அரசு அறிவித்துள்ள பயிா்க் கடன் தள்ளுபடியில் பல குழப்பங்கள் இருப்பதால், இதுதொடா்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
விளாங்குடி எஸ். இளங்கோவன்: புனவாசல் வடிகால் வாய்க்காலில் முழுமையாக அளவீடு செய்து, அதன்படி தூா்வாரி, கரையைப் பலப்படுத்தி சாலை அமைக்க வேண்டும்.