முகப்பு

மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!

மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டது பற்றி..

22 வினாடிகள் முன்பு
மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!
பகிர்:

தஞ்சாவூர் தெற்கு வீதியில் மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தவெக அரசு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையாகப் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை - சம்பா பாதிக்கப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து ஏக்கருக்கு 50,000 நிவாரண வழங்க வேண்டும்,

காய்ந்து வரும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற தமிழகத்திற்கு உரிய தண்ணீரைப் பெற்று தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை 50க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் சார்பில் தஞ்சாவூர் தெற்கு வீதியில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்டு நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.