முகப்பு

தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்: தண்ணீர் கேட்டால் ஸ்பிரே அடிக்கச் சொல்வதாக விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள் குறித்து...

23 நவம்பர் 2026, 9:22 am
தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்: தண்ணீர் கேட்டால் ஸ்பிரே அடிக்கச் சொல்வதாக விவசாயிகள் வேதனை
தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்கள்.
பகிர்:

தஞ்சாவூர் மாவட்டத்தில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்களால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை அருகே உள்ள அம்மாபேட்டை, நல்லவன்னிகுடிகாடு, சாலியமங்கலம், புதூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆற்றுப் பாசனத்தை மட்டுமே நம்பி பணிகளைத் தொடங்கிய நிலையில், போதிய தண்ணீர் வரத்து இல்லாததால் கல்லணையில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாற்று நடவு செய்யப்பட்டு 42 நாட்களான இளம் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன. ஏக்கருக்கு ரூ.45,000 வரை செலவு செய்த நிலையில், பயிர்களுக்குப் போதிய ஆற்று நீரும் கிடைக்கவில்லை. பருவமழையும் பொய்த்துப் போனதால் விளைநிலங்கள் பாலைவனம் போல் வெடித்துக் காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

அதிகாரிகளிடம் முறையிட்டால், பயிர்கள் கருகாமல் பசுமையாக இருக்க ஸ்பிரே மற்றும் டானிக் தெளிக்கச் சொல்கிறார்கள். தண்ணீரின்றி கருகும் பயிர்களை ஸ்பிரே எப்படி காப்பாற்றும் என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இனிமேல் மழை பெய்தால் மட்டுமே பயிர்களை ஓரளவிற்குக் காப்பாற்ற முடியும் என அவர்கள் கூறுகின்றனர்.

எனவே, வேளாண் அதிகாரிகள் முறையாகக் கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

summary

Farmers in Thanjavur district are anguished as Samba crops are drying up due to lack of water.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.