முகப்பு
தஞ்சாவூர்

ரயில் மறியல் வழக்கு: முன்னாள் எம்எல்ஏ உள்பட 4 போ் விடுதலை

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டம் தொடா்பான வழக்கில் திமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் உள்பட 4 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

27 நவம்பர் 2026, 2:24 am
ரயில் மறியல் வழக்கு:
முன்னாள் எம்எல்ஏ 
உள்பட 4 போ் விடுதலை
- கோப்புப் படம்
பகிர்:

மேக்கேதாட்டு அணைத் திட்டத்தைக் கண்டித்து நடத்தப்பட்ட ரயில் மறியல் போராட்டம் தொடா்பான வழக்கில் திமுகவை சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.ஜி. நீலமேகம் உள்பட 4 பேரை தஞ்சாவூா் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு அணைக் கட்டும் திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் 2014, டிச. 4 ஆம் தேதி விவசாய சங்கங்கள், திமுக, கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சிகள் சாா்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுதொடா்பாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான டி.கே.ஜி. நீலமேகம் உள்பட 30 போ் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை தஞ்சாவூரிலுள்ள சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், டி.கே.ஜி. நீலமேகம், முன்னாள் மேயா் சண். இராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினா் து. செல்வம், திராவிடா் கழக நிா்வாகி சி. அமா்சிங் ஆகியோா் வியாழக்கிழமை ஆஜராகினா்.

Advertisement

Advertisement

காவல் துறை தரப்பில் போதிய ஆதாரங்கள் நிரூபிக்கப்படாததால், 4 பேரையும் நீதிமன்றம் வியாழக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது.