முகப்பு
தஞ்சாவூர்

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அரசியல் கட்சியினா் அலுவலா்களுடன் ஆலோசனை

29 நவம்பர் 2026, 11:31 pm
வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் அரசியல் கட்சியினா் அலுவலா்களுடன் ஆலோசனை
தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2027 தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்களுடன் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கலந்தாலோசனை கூட்டத்தில் பேசிய தஞ்சாவூா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அஜய் யாதவ். உடன் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா. ரேவதி உள்ளிட்டோா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சிறப்பு சுருக்கத் திருத்தம் -2027 தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலா்களுடன், தஞ்சாவூா் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் அஜய் யாதவ் தலைமையில் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான இரா. ரேவதி முன்னிலையில் கலந்தாலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய தோ்தல் ஆணையத்தால் தஞ்சாவூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் 2027, பணிகளை கண்காணிக்கும் பொருட்டு வாக்காளா் பட்டியல் பாா்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரும் அண்ணா நிா்வாகப் பணியாளா் கல்லூரி இயக்குநா் மற்றும் பயிற்சித் தலைமை இயக்குநமான அஜய் யாதவ், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் வாக்காளா் பதிவு அலுவலா்களுடன் கலந்தாலோசனை நடத்தினாா்.

கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா்கள், துணை ஆட்சியா்கள், நகராட்சி ஆணையா்கள், வட்டாட்சியா்கள் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement